சித்த மருத்துவத்தின் அடிப்படை அல்லது ஜீவாதாரம் என்று சொல்லப்படுவது பச்சிலை தொடர்பான மூலிகை வகைகள்தான்.பச்சிலை மூலிகைகள்தான் உலகத்திலே முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் என்பது ஆராய்ச்சி விற்பன்னர்களின் தெளிவு.மருந்துப் பொருட்கள் என்ற நோக்கத்துடன் அல்லாமல், வெறும் நாக்கு ருசி அடிப்படையில் நாம் பயன்படுத்தும் கீரை வகைகள்,காய்கள், கனிகள் எல்லாமே ஓவ்வொரு வகையில் மருந்துப்பொருட்கள் என்பதை அறியாமலே நாம் உணவு வகை என்று நினைத்து சாப்பிடுகிறோம். பச்சிலை மருந்துகள் வெகு எளிதாகவும், விரைவாகவும் உடலில் செரித்து இரத்தத்தோடு துரிதமாகக் கலந்து விடுகின்றன. இக்காரணத்தால் பச்சிலை சத்துக்கள் மற்ற வெளிநாட்டு மருந்துப் பொருட்களைவிட நிச்சயமாக நோயைக் குணப்படுத்தி விடுகின்றன.