இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. ‘பிசினெஸ் நல்லா இருந்த பீரியடு’ எனத் தொழிலதிபர்கள் சொல்வது போலவே எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் மிகுந்த நாட்களும் செயலிழந்த நாட்களும் இருக்கின்றன. எழுதுவது ஒரு செயல்பாடு என்றால் அதைத் தொகுப்பாக்கிக் கொணரும் போது அசலாகவே வேறுவிதமான மனநிலை தேவைப்படுகிறது. கொஞ்சம் அல்லது மிகுந்த அபத்தக் கனவுகள் இதில் அடங்காமல் அடங்குவன.