நான் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று பி.ஐ.எம் பட்டம் பெற்றவன். மருத்துவத் துறையில் என்னுடைய இருபத்தைந்து ஆண்டு காலத்தில் நான் கற்ற. அனுபவம் பெற்ற மருத்துவ முறைகளை பொது மக்களுக்கும், மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில், குறிப்பாக சித்த மருத்துவத்தில் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியே ஒரு நூல் உருவாக்கப்படல் வேண்டும் என்ற நோக்கில் காமாலை நோய்க்கான முதல் நூலை எழுதியுள்ளேன். இத்துறையின் அனைத்து நூல்களிலிருந்தும் மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்து வழங்கியுள்ளேன்.