இதுவரை வெளிவராத சாரு நிவேதிதாவின் திருநங்கைகள் பற்றிய நாடகம்
கல்பனா: என் பேர் கல்பனா. ஒரு பத்திரிகையில வேல பண்றேன். இப்போ திருநங்கைகளைப் பத்தியும் அவங்க கலந்துக்கிற மயானக் கொள்ளை பத்தியும் ஒரு ஆர்ட்டிகிள் பண்றேன். அது சம்பந்தமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.
விஜி: தாராளமா பேசலாம்மா. ஆனா இப்படி நிறைய பேரு பேசணும் பேசணும்னு வர்றாங்க. என்னத்தைப் பேசறது? எவ்வளவு நாளைக்குத்தான் பேசிக்கிட்டே இருக்கிறது? பேசுறதுனால என்ன ஆவப் போவுது?