பெற்றோர்களுக்கு செல்லப் பெண்ணாக விளங்கிய புனிதவதி இளம்பருவத்திலிருந்தே சிவபெருமானை மிகவும் பக்தியோடு வழிபட்டாள். சிவனடியார்களுக்கு தினந்தோறும் உணவு படைத்து மரியாதையுடன் வணங்கினாள். புனிதவதி சிவபெருமானிடத்தில் கொண்டிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகமானது. அன்பும், கருணையும் அமைதியும் உடையவளாய் சிறந்து விளங்கிய புனிதவதி மணப்பருவம் அடைந்தாள்.