வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்ள ஆசைப்படுவார்கள். நியாயமான ஆசைதான். ஆசையின் உந்துதலால் அவசர முடிவுகள் கூடாது. நாம் கட்டும் வீடு நூறு ஆண்டுகள் ஏன் தலைமுறை தலைமுறையாக ஆண்டு அனுபவிக்கத் தக்கதாக அமைய வேண்டும். இதற்கு ஒருவர் மனையை வாங்குவதற்கு முன் அந்த மனையைப் பற்றிய முழு விவரத்தையும் அறிய வேண்டும். அந்த மனை வீடு கட்டத் தகுதியானதா? அதில் வீடுகட்டி வசித்தால் நன்மை ஏற்படுமா என்பது போன்றவற்றை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.