தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டைச் சுற்றிலும் நாம் சென்று காண்பதற்குரிய இடங்கள் பல. அவ்விடங்களில் சிலவற்றைத் தேர்ந்து சுற்றுலா செல்லலாம். காண வாய்ப்புள்ளவர்கட்கு வழிகாட்டியாவது, காண இயலாதார்க்கு நேரிற் சென்ற இன்பத்தை நல்குவது இந்நூல். ஒவ்வோர் இடத்தினையும் முழுமையாகக் கண்டு திறம்பட விளக்கும் எழுத்து நடையில் அவ்விடக் காட்சிகள் மனத்திரையில் அழுத்தமாய் எழுகின்றன. பயண நூல்களில் இந்நூல் பயன்படத்தக்க நூல்.