சிந்தா தேவியின் பூதவுடல் மறைந்து இரண்டு நூற்றாண்டுகளாயின. ஆனால் அவள் புகழ் உடம்போ இன்றும் தெய்வீக ஜோதியுடன் பிரகாசிக்கின்றது.புந்தேல்கண்ட் கிராமத்தில், இன்றும், ஆண் பெண் அனைவரும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் சிந்தா தேவியைப் பூஜிக்கின்றனர். அன்றைத்தினம் அக்கோயிலானது இன்னிசைக் கீதங்களாலும் நவ நவமான ஆடையலங்காரப் பிரியர்களின் கூட்டத்தாலும் மங்களகரமான அலங்காரங்களாலும் பொலிவுற்று விளங்கும்.