நந்தாவிற்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
பதில் பேசுங்க சார்
பேசுங்க....வந்த ஒரே நாள்ல எம்.டி.ய மடக்குறது எப்படின்னு இவகிட்டதான்
கத்துக்கனும் என்று ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல்
பேசிகொண்டே சென்றாள்.
அவள் பேச எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்க .இந்த இடத்திலேயே செத்துவிட மாட்டோமா என்று நந்தனா துடியாய் துடித்தாள்.
வில்
யு..செட்..அப் என்று அந்த பில்டிஙே அதிரும் அளவிற்கு கத்தினான்
பாலா.அனைவரும் அமைதியாகி அவனைப் பார்க்க ,ஷீலா அவனைப் பார்த்து
மிரண்டாள்.அப்போதுதான் அவளுக்கு தான் பேசிய வார்த்தைகளின் அர்த்தம்
புரித்தது.அவள் மிரண்ட பார்வையுடன் பாலாவைப் பார்க்க,
அவன்
மெல்ல நந்தனாவின் அருகில் சென்றவன்,அவளைத் தன் தோளோடு சேர்த்து
அணைத்தான்.அவளது உடல் இறுகியதை பொருட்படுத்தாது..அனைவரின் முன் அவளது
நெற்றியில் முத்தமிட்டான்..பின் அனைவரையும் பார்த்து சொன்னான்...
என்
மனைவியைய் ,கட்டிபிடிப்பதற்கு இல்லை முத்தமிடுவதற்கு யாரையும் பார்த்து
பயப்படுவதோ இல்லை அனுமதி வாங்குவதோ தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்.
நீங்க என்ன நினைக்கிறிங்க என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான்.
அனைவரும் அதிர்ச்சியாய் அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தனர்..
சத்தியாவிற்கு முகத்தில் அசடு வலிந்ததது.
ஷீலா ஹார்ட் அட்டாக் வந்தவளாய் அவர்களையே பார்த்துகொண்டு நின்று இருந்தாள்...
எஸ் ....ஷீ...ஸ்.மை ஒய்ப்....என்றான் பாலா பெருமிதமாக...