அதிகாலையிலே எழுந்து வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சூரியகாந்தி.தூங்கியும் தூங்காமலும் கலைந்திருந்த கூந்தலோடு எவ்வித ஒப்பையும் இன்றியே களையான முகம்.மாநிறமாய் இருந்தபோதும் பளபளவென மின்னும் அழகு முகம் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மலர்க் கண்களால் வானத்தைக் கூர்ந்து பார்த்தாள்