இந்நூலின்
பதிப்பாசிரியர் திரு.சண்முகம் அவர்கள் நான் எழுதிய பிற சித்த மருத்துவ
நூல்களைப் பார்த்த பிறகு "சித்த மருத்துவம்” பற்றி ஒரு எளிய நூலை எழுதுமாறு
கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்(ழர்) மருத்துவம் என்ற நூலை எழுதினேன்.
சித்தர் கூறிய மூலிகை மருத்துவம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு
உரிய மருத்துவம் பற்றி விவரங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம்
எழுதியுள்ளேன்.அத்துடன் நோய் வராமல் இருக்க சித்தர்கள் கூறிய வழிமுறைகள்
எழுதியுள்ளேன்.
திருவள்ளுவர், திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில்
கூறிய 10 குறளுக்கும் மிக சிறப்பான புதிய பொருளை எழுதியுள்ளேன்.
மொத்தத்தில் இந்நூல் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். அனைவரும்
படித்து முழு ஆரோக்கியம் பெற வேண்டுகிறோம். வாழ்க தமிழ்! வளர்க சித்த
மருத்துவம்!!