உங்களுடைய வாழ்க்கை உங்களுக்குச் சொந்தமானதுதான், ஆனால் அது உங்களுடைய உடைமை அல்ல. “உங்களுடைய வாழ்க்கை யாருக்குச் சொந்தம்?" என்று உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? "என் வாழ்க்கை என்னுடையதுதான், இதிலென்ன சந்தேகம்?" என்று உடனடியாக பதிலளிப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான்: “அதைப் பற்றி நாம் ஒரு கணம் சிந்திக்கலாம்." புத்த மதத்தில், 'ஜோம்யோ’ என்பது ஒருவருடைய ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சொந்த ஜோம்யோ இருக்கிறது. நாம் பிறக்கின்ற கணத்தில் அது
தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் அது எவ்வளவு நீண்டது என்பது நம் யாருக்கும் தெரியாது. உயிரோடு இருத்தல் என்றால், நம்மை நம்பி நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற இந்த வாழ்க்கையை நாம் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும். நம்முடைய வாழ்க்கை நம்முடைய உடைமை அல்ல. அது நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு பரிசு. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காலம்வரை பாதுகாக்க வேண்டும். அதை நாம் பேணிப் நம்மில் சிலருக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டிருக்கலாம்,
சிலருக்கு அது ஒரு குறுகிய காலமாக இருக்கலாம். இது நியாயமில்லைதான்.ஒரு வாழ்க்கையின் மதிப்பு அது எவ்வளவு நீடித்திருக்கிறது என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை என்று புத்த மதம் கூறுகிறது. காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் இன்று எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்?