உலக நாடுகளில் பயணம் செய்த போது கிடைத்த தகவல்களை தரும் நுால்.
மரக்கலங்களில்
வந்தோர் மரக்காயர்; குதிரை வியாபாரியாக வந்தோர் ராவுத்தர்; முத்து
வியாபாரியாக வந்தோர் முத்துமரிக்கா என, புரிய வைக்கிறது. சுவிட்சர்லாந்து
நாட்டில் பயண அனுபவ செய்திகளை வெளிப்படுத்துகிறது. வைரத்தில் சிறிய, பெரிய
கற்களுக்கு உள்ள விலை மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
ஜப்பானியர்
தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவர்; அவர்களுக்கு ‘எல்’ என்ற உச்சரிப்பும்,
சீனர்களுக்கு ‘ஆர்’ உச்சரிப்பும் வராது என கூறுகிறது. இலங்கை ரத்தின
கற்களுக்கு சிறப்பிடம் பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. சீன பட்டு உஷ்ணம்,
குளிர் தட்பவெப்ப நிலைக்கு உகந்தது போன்ற செய்திகள் உள்ள நுால்.