வெற்றி நமதே என்று உறக்க கூறி
கவிதை எழுத ஓடி வந்தேன்
வெற்றி நமதே!!!
வெற்றியின் இடத்தை முடிவு செய்
வெற்றியின் தூரத்தை அளவிடு
கடக்க போகும் நேரத்தை கணக்கிடு
தயங்காமல் புறப்படு நிச்சயம் வெற்றி நமதே!!!
தோல்வியை கண்டு துவண்டுவிடாமல்
தோல்வியை கடந்து வந்தோம்
என்று எண்ணி
போர் கொண்ட வீரனாய் வேகம் கொண்ட வேங்கையாய் சீறிடு
வெற்றியை நோக்கி விரைந்திடு
வெற்றி நமதே!!!
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே
உள்ள பாலத்தை பதற்றம் இல்லாமல்
கடப்போம் நிச்சயம் வெற்றி நமதே!!!
வெற்றி பாதையை வழி மறிக்கும் சதிகார கண்ணிவெடிகளை தைரியமாக தகர்ப்போம்
மறைந்து தாக்கும் தந்திரம் உடையோரை
மார்பு தூக்கி நேரில் நின்று அஞ்சிடவைத்து ஓட விடுவோம்
புறமுதுகிட்டு
அஞ்சாமல் பாய்ந்து ஓடு
வெற்றி நமதே!!!