
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Uchi Mudhal Ullangaal Varai (part 2)
Free shipping over ₹500
கடந்த ஐந்தாண்டுகளாக 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பின்கீழ் மருத்துவக் கட்டுரைகள் விகடனில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அன்றாட வாழ்க்கையில் உடல்நலம் பற்றிய பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்ட இத்தொடர் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அபாரமான வரவேற்பு தந்தார்கள். அத்துடன், இவற்றைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற பலத்த கோரிக்கையையும் வாசகர்கள் கடிதங்கள் மூலமாகத் தெரிவித்தார்கள். வாசகர்களின் விருப்பம்தான் நம் விருப்பமும். எனவே தலை, தோல், வயிறு, கண் மற்றும் ஜனனத் தொழிற்சாலை கட்டுரைகள் அடங்கிய 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' முதல் பாகத்தைப் புத்தகமாக வெளியிட்டோம். இதற்கும் வாசகர்களிடம் அபரிதமான வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, இதயம் மற்றும் காது, மூக்கு, தொண்டை பற்றிய கட்டுரைகள் 'உயிர் இயந்திரம்', 'முக்கூடல் எக்ஸ்பிரஸ்' என்ற தலைப்புகளில் விகடனில் வெளியாகின. இந்த இரண்டையும் இணைத்து, 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' இரண்டாம் பாகத்தை இப்போது புத்தகமாக வெளியிடுகிறோம். இந்த நேரத்தில், இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவக் குறிப்புகளை எளிய நடையில் தந்து, சில டிப்ஸ்களையும் வழங்கிய டாக்டர் சிவகடாட்சத்துக்கும் காது, மூக்கு, தொண்டை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் வழங்கிய டாக்டர் கே.கே.ராமலிங்கத்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போதும் ஆர்வத்தோடு என்னை உற்சாகப்படுத்தும் வாசகர்களின் கைகளில் இப்புத்தகத்தை மிகவும் பெருமையுடன் அளிக்கிறேன்.
Topics / குறியீடுகள்