நாம் எல்லோருடைய மனதிலுமே ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயம் 'விதிகளை மீறக்கூடாது' போக்குவரத்திலும் அறம் சார்ந்த விஷயங்களிலும் விதிகளை மீறக்கூடாது என்பது சரிதான். ஆனால் எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா என சொல்லப்படுபவைகளைத் தானே தினம் தினம் கடை பிடிக்கிறோம். இந்த வழக்கத்துக்கு ஒரு சின்ன புள்ளி வைப்போம். உங்கள் ஒவ்வொரு நாளையும் புதுமையான விஷயங்களோடு தொடங்குங்கள். ஒரு வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது போன்ற பழமையான கருத்துகளை உடைத்தெறிந்து விட்டுப் புது புதுக் கோணங்களில் அணுகும்பொழுது உங்கள் வெற்றிகளை தீர்மானிப்பது நீங்களாக இருப்பீர்கள். எளிதாக சொல்ல வேண்டுமானால் நம்ம சக்ஸஸ் ஃபார்முலாவை நாம தான் எழுதுவோம்.