தமிழ் இலக்கணங்கள் எவ்வளவு ஆழ்ந்த புலமையுடன் எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய மொழியியல் ஓர் உரைகல்லாக விளங்குகிறது. மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் இந்நூல் இலக்கண ஆய்வாளர்களுக்கும் தமிழைத் தெளிவாக அறிய விரும்புவோருக்கும் நல்ல தெளிவைக் கொடுக்கும்.
செவ்வியல் தகுதி பெற்ற தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று அதன் இலக்கணம் என்பதால் தமிழில் தொடர்ந்து இலக்கண ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமே உள்ளன. அவ்வகையில் இந்நூலில் இருபது ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் ஆய்வரங்குகளுக்காக எழுதப்பட்டவையாகும்.