‘மணவாழ்வு’ அது தரும் ‘காதல்’ இரண்டுமே அற்புத உணர்வுகளோடு நெருங்கிய
உறவுகொண்டவை! ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மணபந்தத்தை ஸ்பரிசிக்கையில், அழகிய
எதிர்பார்ப்புடன் கூடிய கனவுகளால் ஆக்கிரமிக்கபடுவதைத் தவிர்க்கவே
முடியாது. அப்படித்தான் மதுராவும் அழகிய கனவுகள் பலவற்றோடு, உற்றம் சொந்தம்
பிரிந்து வெளிநாடு செல்கிறாள்; எல்லாவற்றுக்கும் மேலான உறவென்று
வரித்துக்கொண்டவனில் அபரிதமான நம்பிக்கையோடு! அந்த நம்பிக்கை வெற்றி வாகை
சூடி, காதலெனும் உறவை ஸ்பரிசிகின்றதா? ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும்
சுமந்து சென்றவள் வாழ்வு மலர்ந்ததா? என்பதை, கதையில் அறிந்து கொள்ளுங்கள்.