ரொம்ப அவசரம். பதினைந்து நாள்களுக்குள் உங்களால் ஒரு புத்தகத்தை எழுதித்தரமுடியுமா என்று சவுக்கு சங்கரிடம் கேட்டபோது, என்ன புத்தகம் சொல்லுங்கள் தோழர், முயற்சி செய்கிறேன் என்றார். நரேந்திர மோடி ஏன் நமக்கான பிரதமர் அல்ல என்பதைத் தகுந்த காரணங்களோடும் ஆதாரங்களோடும் எழுதவேண்டும் என்று சொன்னேன். பார்க்கிறேன் என்றவர் அடுத்த இரண்டு வாரங்களுக்குக் காணாமல் போய்விட்டார்.
நானும் மறந்துவிட்டேன். ஆனால் சரியாகப் பதினைந்து நாள்கள் கழித்து சங்கரிடமிருந்து மெயில் வந்தது. புத்தகத்தை முடிக்கமுடியவில்லை, சாரி தோழர் என்று எழுதியிருப்பார் என்று நினைத்துப் பிரித்தேன்.