ஆங்கில மொழி உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டறக்கலந்து விட்டது. இந்தியா ஆங்கிலக் காலனியேற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும், பல்மொழி பேசும் நாடு என்பதாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தகவல் தொடர்பு கொள்வதற்கு ஆங்கில மொழி அவசியமாகிறது.
அந்த ஆங்கில மொழியை, எழுத்துகளின் அடிப்படையில் உள்ளது உள்ளபடியே தமிழ் மொழியை உச்சரிப்பது போல உச்சரிக்க முடியாது. ஒரே எழுத்து,வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும் விநோதத் தன்மையைக் கொண்டது ஆங்கில மொழி. இத்தகைய மொழியை உச்சரிப்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்நூல். ஆங்கிலத்தைச் சரியாக உச்சரிப்பதற்கு, இந்நூல்
பெரிதும் பயன்படும்.
- பதிப்பகத்தார்.