நெல்சன் ரோலிலாலா மண்டேலா, தென் ஆப்ரிக்காவின் நிறவெறி காலனி
ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். ஆரம்ப காலத்தில் ஆப்ரிக்க தேசிய
காங்கிரசில் இணைந்து அகிம்சைப் போராட்டமாக ஆரம்பித்துப் பின்னர்
"ஆப்ரிக்காவின் ஈட்டி' என்னும் பொருள்படும் எம்.கே. கிளை இயக்கத்தைத்
தோற்றுவித்து, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் 27 ஆண்டுகள்
சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின்
தலைவராகிப் பிரதமர் டி கிளார்க்குடன் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து
கொண்டார். பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென் ஆப்ரிக்காவின் முதல்
கறுப்பினப் பிரதமரானார். (1994-1999). 25 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்ற
நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்டமாகும். தனது 85-வது
வயதில் பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற நெல்சன் மண்டேலா, "தென்
ஆப்ரிக்காவின் தேச பிதா'வாகப் புகழப்படுகிறார்...