ஒரு கிராமம்.. நாற்பது திருடர்கள் இன்றைக்கும் உலக கிளாசிக்குகளில் ஒன்றாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ‘செவன் சாமுராய்’ படம் கருதப்படுகிறது. 16-ம் நூற்றாண்டு ஜப்பானில் குடியானவர்களின் நிலை, சாமுராய் வீரர்களின் வாழ்க்கை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண்பித்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. அறுவடையான பயிர்களைக் கொள்ளையடிக்க குதிரைகளில் திருடர்கள் கூட்டமாக வருவார்கள்