நூலாசிரியர் சிவசிவ. சரவணன் கடந்த 15 ஆண்டுகளாக கட்டிட தொழிலில் சிறந்து விளங்கும் இன்ஜினியர். மக்களிடையே வாஸ்து பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்று வாஸ்து சாஸ்திரம் - ஜோதிடரீதியான விளக்கம் புட்டா வாஸ்து பொக்கிஷம், முதலிய நூல்கள் இலவசமாக வெளியிட்டுள்ளார். சிநேகிதி, தினமலர், சானசிந்தாமணி மற்றும் பல வார இதழ்களில் கட்டுரைகள் மற்றும் வாஸ்து விளக்கங்களை கொடுத்துள்ளார். கட்டிடத்திற்கும், ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி முறையாக பயிற்சி பெற்றவர்.பல நகரங்களில் வாஸ்துபடி வரைபடம் வரைந்து கொடுத்தும் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தும் வாஸ்து ஆலோசனை கூறியும் வருகிறார். பள்ளத்தூர் சிவனடிச்செம்மல் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் அவர்களிடம் சிவதீட்சை பெற்றவர். முறையே சிவபூஜை செய்தும் வருபவர். அதன்மூலம் தெய்வ அநுக்கிரகங்களுடன் சிறப்பான முறையில் கட்டிடம் கட்டிக்கொடுத்து வருகிறார். இந்த கலியுகத்தில் வாஸ்து - ஜோதிடம் - ஆன்மீகம் என அனைத்தையும் ஆராய்ந்து புதிய தொழில் நுணுக்கங்களோடு வீடுகட்டி கொடுப்பதில் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பதிப்பகத்தார்.