இன்றைய அரசியலமைப்பின் மொழி தொடர்பான அத்தியாயத்தில் 'சிங்களம் இலங்கையின் ஆட்சி மொழியாகும்' என்று முதல் வரியில் கூறிவிட்டு அடுத்த வரியில் 'தமிழும் ஒரு ஆட்சிமொழி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏதோ தமிழுக்கு போனால் போகிறது என ஒரு இரண்டாம் தர அந்தஸ்த்தை தருவது போல் இருக்கிறது. இதை மாற்றி புதிய அரசியலமைப்பில் 'சிங்களமும் தமிழும் இலங்கையின் இரண்டு ஆட்சி மொழிகள்' என்று ஒரே வரியில் சொல்லப்படும் யோசனையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக நான் வழிகாட்டல் குழுவில் தெரிவித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிட செய்துள்ளேன்.