எந்த ஒரு துறையிலும் புத்தகப் படிப்பைக் காட்டிலும் ஒருவருடைய அனுபவப்படிப்பு மிக ஆழாமானது. அந்த வகையில்
சமையற்கலையில் அறுசுவை அரசின் அனுபவம் என்பது ஒரு சமுத்திரம் போல, சமையல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழும் அறுசுவை அரசின் சமையற் கலை அனுபவங்களை புத்தகமாக வாசகர்களுக்கு வழங்குவதில் கற்பகம் புத்தகாலயம் மகிழ்வும் , பெருமையும் கொள்கிறது. புதிதாக சமையலறையில் நுழையும் இளம் பெண்களுக்கு இது மிகவும் உதவியாகயிருக்கும். ஊராரிடம் பெயரும் , புகழும் பெற்று வரும் ஆண்களையும் தனது அருமையான சமையலின் மூலம் கவர்வது அவர்களது மனைவியின் கைப்பக்குவம்தானே. சென்னைக்கு வந்து 55 வருடங்களாகத் தொழில் புரியும் எனக்கு 77 வயதாகிறது. என் அனுபவங்களும் சில சமையல் குறிப்புகளும் இந்த புத்தக வடிவுல் வெளிஇவந்துள்ளது.
- அறுசுவை நடராஜன்.