பக்குவமான உணவு சமைப்பதில் ஆந்திர பிரதேச பெண்கள் முதன்மையாக திகழ்கிறார்கள். அச்சுவையான சமையற்கலையை நம்முடைய தமிழக மக்களும் உணரும் வண்ணம் ஆந்திர பிரதேச சமையல் வகைகளை இதில் எழுதியிருக்கிறார் பிரபா ராஜப்பா அவர்கள்.
ஆந்திரா பெசரட்டு, குத்தி வங்காய், ஆந்திரா கோடி கூர , ஆந்திராச் சேப கூர, செருக்கு பால தோசை, பஞ்ச ரத்னா தோசை போன்ற பல்வேறு வகையான சமையல் குறிப்புகள் அடங்கியுள்ள இப்புத்தகம் சமையல் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம்.