இது எனது மூன்றாவது நூல். இந்நூல் தொகுத்துத் தொடுக்கப்பட்ட கதம்பமாலை ஆகும். செய்தித் தாள்கள் - பத்திரிகைகள் - புத்தகங்கள் - தொலைக்காட்சிகளில் நான் படித்தவை கேட்டவற்றிலிருந்துத இரவல் பெற்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தொகுத்து எனது பாணியில் தந்துள்ளேன்.
சில வியத்தகு அறிவியல் செய்திகள் - அரிய செய்திகள் - அனைவருக்கும் நலம் தரும் எளிய உணவு மருத்துக் குறிப்புகள் என கம்பமாக்கி, படிக்க சுவையூட்டும் வகையில் இதனைத் தொகுக்க முயற்சித்துள்ளேன்.