ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையற்கலையும் ஒன்று. இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? இன்றைய விஞ்ஞான யுகத்தில் - வேகத்தில் சமையற் கலை பெரிதும் முன்னேற்றம் பெற்றுள்ளது. சமைக்கும் தன்மையும், ருசிக்கும் தன்மையும் மாறிவருகின்றன.
நாவிற்கு இனிய வகையில் பலவிதமான மட்டன் சமையல்களை விவரித்து தாய்மார்களின் கைவண்ணத்தைப் பரிமளிக்க உதவும் இச்சிறு நூலை அனைவரும் விரும்பி வரவேற்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.