இத்தொகுப்பில்
உள்ள சில கவிதைகள் இதயத்தின் அடி ஆழம் வரை சென்று சொல்ல முடியாத
உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வார்த்தைகள் - அதன் மாயங்கள் என்னவென்று
சொல்வது? இருத்தல் இருக்கும் வரை வாசிப்பு குறையாமல் இருக்கவேண்டும் என்பதே
என் ஆசை. மனதின் அடி ஆழத்தில் ரசனைமிக்க கவிதையின்தேடல் இருந்து..
கொண்டேயிருக்கிறது. அவ்வகையில்
சமீபத்தில் படித்த இத்தொகுப்பு மகிழ்வான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது.
கவிஞனின் அகக்கண்கள் பிரபஞ்சத்தின் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டே
இருக்கும். எப்போதெல்லாம் இயலுகிறதோ அதை பதிவு செய்துகொண்டும் இருக்கும்.
அத்தகைய கவிதைகளைப் படைத்தவன் தான் இந்தக் கடவுளைப் படைப்பவன். உமா ஷக்தி
உதவி ஆசிரியர், மங்கையர் மலர், கல்கி குரூப்