அக்குபிரஷர் என்பது ஒரு பழங்கால மசாஜ் தெரபி ஆகும். இந்த முறையில் உடலின் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அக்குபிரஷர் ரோலர் என்பது உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டிவிட மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு கருவியாகும். மேலும் இந்த கருவி மனம் மற்றும் உடல் தொடர்பான வியாதிகளை போக்க உதவுகிறது அதுவும் நீங்கள் ரிஃப்ளெக்ஸ் புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, அவை செயல்படுத்தப்பட்டு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது, ஒரு நிம்மதியான உணர்வைப் பெறுவீர்கள். இப்போது அக்குபிரஷர் ரோலரால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.