மூன்று சரீரங்களில் முக்கியமானதாகிய சூக்கும சரீரம் ஒருவர் இறந்த பின் எங்கு செல்கிறது. ஏன் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. மீண்டும் எப்படிப் பிறப்பெடுக்கிறது. ஏழுலகங்களும் அதன் தன்மைகளும், ஆவிகளின் வாழ்க்கை முறைகள், சிராத்தம் செய்வது, பித்ருக்களுக்கு உணவு படைப்பதன் உண்மைகள் போன்ற அரிய செய்திகள் அடங்கியது. இது நேரடியாக ஆவிகளிடம் தொடர்பு கொண்டு திரட்டப்பட்ட தகவல்களின் பேரில் எழுதப்பட்ட, பரிசோதித்து தெளிவு செய்துகொள்ளக்கூடிய தகவல்கள் அடங்கிய நூல். மரணம் ஆவிகள் தொடர்பான பயத்தை நீக்கி தெளிவுதருகிறது.