இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் முக்கியமானவரும் நவீன இந்தியாவைச் செதுக்கிய சிற்பிகளுள் ஒருவருமான சாஸ்திரியின் தியாக வாழ்க்கை. சுதந்திர இந்தியாவைக் கட்டுதானம் செய்த சிற்பிகளுள் லால் பகதூர் சாஸ்திரி பிரதானமானவர். நேருவுக்குப்பிறகு யார். அவர் விட்டுச் சென்ற இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும். புதிய உத்வேகத்தோடு தேசத்தை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் தலைமையார். இந்தியாவே திகைத்து நின்ற போது, லால் பகதூர் சாஸதிரியைத் தேர்ந்தெடுத்தார் காமராஜர். தேச சேவை அவர் ரத்தத்தின் ஒவ்வோர் அணுவிலும் ஊறியிருந்தது. தன்னலமில்லாத இந்தத் தியாகியின் வாழ்வில் தான் எத்தனை புயல்கள், போராட்டங்கள்.அனைத்தையும் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.
- ஆர்.பி.சாரதி.