ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில் குழந்தைப்பேறு
இல்லாத பெரியாழ்வாரால் கண்டு எடுக்கப்பட்டவர். அவர் கோதை எனத் திருநாமம்
இட்டுவளர்த்து வந்தார்.
• சூடிக் கொடுத்தவள்
ஆழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு
உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, "அம்மாலை
தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையே வேண்டும்" எனவும்
பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என
நினைத்து ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் இட்டார்.
பெரியாழ்வார் வடபெருங்கோவில் உடையானுக்குச் சாத்துவதற்காகத் தொடுத்து
வைத்த மாலையைத் தாம் அணிந்து பின் இறைவனுக்குச் சாத்தியதால் சூடிக் கொடுத்த
நாச்சியார் என்றும் திருநாமம் இட்டு அடியார் அழைத்தனர்.