பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘மின்னல் திரிகள்’
எனும் இந்நூலின் அணிந்துரையில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இவ்வாறு
கூறுகிறார்கள்.
அப்துல் காதரிடம்
பாவண்மை¸ நாவன்மை
இரண்டும் உண்டு
இரண்டு சிறகுகளைப்போல.
அதனால்தான் அவர்
உயரங்களில் பறக்க முடிகிறது.
அவர் வார்த்தைகளில்
வசிய வலையிருக்கும்.
அவர் பேச்சைக் கேட்பதற்காகவே
பலர் வருவார்கள்.
அவர் பேச்சுக்குத் தமிழகத்தில்
ஏராளமான ரசிகர்கள் உண்டு
மன்றம் வைக்காத குறைதான்.
மின்னல்கள் சுடர்கள்.
ஆனால்¸ அப்துல் காதரோ
அவற்றைத்
திரிகள் என்கிறார்¸
அந்தத் திரிகளின்
சுடர்களாக ஒளிவீசுகின்றன
அவருடைய கவிதைகள்.




























