வரவை கூடாத நோய்தான் பார்க்கின்ஸன்ஸ். ஆனால், வந்துவட்டால் எப்படிச் சமாளிப்பது ?விளக்குகிறது இப்புத்தகம்.
மனித உனல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமானது டோபாமைன்' என்ற வேதிப்பொருள். மூளை செல்களில் உற்பத்தியாகும் இந்த வேதிப்பொருளின் அளவு குறையும் போது, பார்க்கின்ஸன்ஸ் நோய் ஏற்படுகிறது. ஜாதி, மதம்,ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கக்கூடிய இந்தப் பார்க்கின்ஸன்ஸ் நோய், நல்ல திடகாத்திரமான இளைஞரைக்கூட குடுகுடு கிழவரைப் போல் தள்ளாத நிலைக்கு ஆளாக்கிவிடும். கை நடுக்கம், தசை இறுக்கம் போன்றவை பார்க்கின்ஸன்ஸ் நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். இவற்றை உடனடியாகக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.