மனித உடல் பாகங்களில் அற்புதமானது, அதிசயமானது மூளை. சுமார் 1500 கிராம் எடையுள்ள மூளைதான், ஆறடி உயரம் உள்ள மனிதனை ஆட்டிப்படைக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டுவதும் இதுதான். கட்டுப்படுத்துவதும் இதுதான். தகவல்களைப் பதிய வைத்துக்கொள்வதும் இதுதான். தக்க நேரத்தில் நினைவூட்டுவதும் இதுதான். மனமும் இதுதான்.அறிவும்இதுதான். மனச்சாட்சியும் இதுதான். ஆக, மனிதனைப் பொறுத்தவரை எல்லாமாக இருப்பது மூளை. ஒரு மனிதன் முழுமையானவனாக இருக்க, மூளை ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.இந்த முளையில் ஒரு நரம்பு பிசகினாலும் ஆபத்துதான்.இன்னும் முழுமையாக ஆராயப்படாத மூளை பற்றிய அத்தனை தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம்.