தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' இதைச் சொல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதைச் சொல்லிவிட்டு தைலம் தேய்த்துக் கொள்ளாதவர்களும் இருக்க முடியாது. ஆனால்,தைலம் தேய்த்துக் கொண்டால் தலைவலி போய்விடும் என்பதே ஒரு மூடநம்பிக்கைதான். எவ்வளவோ காரணங்கள்; எத்தனையோ விதமான தலைவலிகள், எல்லாவற்றுக்கும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
தலைவலி வந்தால் என்ன செய்வது ? வராமல் இருக்க என்ன செய்வது? என்னென்ன விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன ?என்று பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்நூல்.