"நோயாளிகளின் பிணி நீக்கம்” என்பதே முதற் கறிக்கோளாகும். இதற்காக அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, முதலிய பாகுபாடுகளை விட்டொழித்துப் பல முறைகளிலுள்ள மருத்துவ அறிவியல் ஆய்வில் கிடைத்த சான்றுகள் நிறைந்த மருத்துவ முறையை ஒவ்வொரு நோய்க்கும் அத்துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் துணை கொண்டு மருத்துவம் மேற்கொண்டால் சாதனை படைக்கலாம். இந்நோய்க்குக் "குணமில்லை, மருந்தில்லை” என்னும் சொற்களை அகராதியிலிருந்து எடுத்துவிடலாம்.