மினுக் மினுக் என்று மின்னும் கோடானுகோடி நட்சித்திரங்கள். பாட்டி வடை சுட்ட அதே நிலா,மிதக்கும் செயற்கைக் கோள்கள் விண்வெளி அற்புதங்கள் அனைத்தையும் அருகில் சென்று பார்க்க ஒரு சுவாரஸ்யமான அறிவியல் டூர் கெய்ட். வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இதில் விடை உண்டு. உங்கள் முதுகில் இரண்டு இறக்கைகளைச் செருகி, விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்நூல்.