இருவர் சேர்ந்து எழுப்பும் காதல் மாளிகைக்கு நம்பிக்கைதான் அஸ்திவாரமே இப்போதெல்லாம் மாளிகை எழுப்பும்போது தென்னங்கீற்றை திரைபோட்டு மறைப்பது வழக்கமாகி இருக்கிறது. அந்த நாகரிகத்தின்படி சிந்துஜாவும் அஜெய்சந்திரனும் தங்கள் வாழ்க்கை மாளிகையை மனதையே திரையாகப் போட்டு மறைத்தனர். அந்த மனத்திரையை விலக்க வழி தெரியாமல் சிந்துஜா திகைத்தாள் அஜெய்சந்திரன் தடுமாறினான்.