கேள்விகளும் சந்தேகங்களும்தான் மனித குலத்தை, அறிவியல் உலகிற்கு அழைத்து
வந்திருக்கிறது. எனவே அவை வணங்கத்தக்கவை. தேகத்தின் ஏதோ ஒருபாகம் பற்றி
மட்டும் நமக்கு சந்தேகம் வருமானால் நாம் அதை வேறொரு தேகத்தோடு ஒப்பிட்டுப்
பார்த்து அதுபோன்ற சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில்....
உலகின் வெவ்வேறு துருவங்களில் வாழ்கிற மனிதர்கள் என்றாலும் உடல்
உறுப்புகள் ஏறத்தாழ ஒரே வடிவில்தான் இருக்கும். இவை ஒரேமாதிரியாகத்தான்
செயல்படும்.
ஆனால்.... தேகத்தைச் சார்ந்திருக்கும் நம் மனஉலகம் பற்றியோ அல்லது
மனஉலகைச் சார்ந்திருக்கும் நம் நடவடிக்கைகள் பற்றியோ ஒரு சந்தேகம்
எழுமானால் இவற்றை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்மால் தீர்த்துக்
கொள்ள முடியாது.
ஏனெனில்... ஒவ்வொருவரின் மனஉலகமும் வேறு. அது எல்லையற்றது.
கட்டுப்பாடற்றது. கண்ணுக்குப் புலனாகாதது. எனவே அதன் இயக்கம் வெவ்வேறாக,
சற்றும் எதிர்பாராததாகக் கூட இருக்கும்.