இயற்கை நமக்கு அள்ளித் தந்துள்ள பல அற்புதமான கொடைகளில் முக்கியமானவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளும், பழங்களும் ஆகும். ஒவ்வொரு காயிலும், பழத்திலும் நோயை அண்ட விடாமல் தடுக்கும் நோயைக் குணப்படுத்தும் பல சத்துக்கள், வேதிப் பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு காயிலும், பழத்திலும் என்னென்ன சத்துகள் உள்ளன என்பது குறித்த விரிவான விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.