ஒரு நாள் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திலிருந்து, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கான அதிக எண்ணிக்கை ரன்களை விளாசும் வரை வளர்ந்திருக்கும் வீரேந்திர சேவாகின் வெற்றிக் கதையைச் சுவையாக விளக்கும் புத்தகம் இது. வருங்காலத்தில் மிக அதிகமான சாதனைகளைப் புரியப்போகும் இந்திய வீரர்கள் வரிசையில் சேவாகே முதன்மையிக நிற்கிறார். அவரது இது வரையிலான சாதனைகள் ஒன்றுமில்லை என்று சொல்வதைப் போல இருக்கும். இனி ஒரும் சாதனைகள், அதனாலேயே அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.
சேவாகின் ஆட்டம், கோச்சிங் புத்தகங்களில் எழுதியிருப்பதைப்போல இருக்காது. பலமுறை ஞேவாக் விளையாடும் போது ரசிகர்களுக்கு வெறுப்பும் கோபமும் ஒரும். ஆனாலும் சேவாக் பந்துகளை அதிரடியாகத் தாக்கும் போது ரசிகர்களின் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.
நஜப்கார் எனும் கிராமத்திலிருந்து புறப்பட்டு, உலகளவில் புகழ் அடைந்திருக்கும் சேவாகின் கதையை எழுதியவர் விஜய் லோகபள்ளி. தி ஹிந்து செய்தித்தாளின் கிரிகெட் நிருபராக உள்ளார்.
- விஜய் லோகபள்ளி.