ஒரு குடந் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது” என்று ஒன்று முதல் பத்து வரை இருவர் எதிரெதிராக இடைவெளிவிட்டு நின்று கைகளை மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள அதன் இடைவெளியில் மற்றவன் புகுந்து சொல்லிச் செல்லும் போது பத்தாவது எண் சொல்லப்படும் போது நுழைபவன் பிடித்துக் கொள்ளப்படுவான். பிடிபடாமல் தப்புவது அவன் திறமையைப் பொருத்தது. இப்படி எண்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டு இன்றும் உள்ளது.