அறிவதற்காகக் கற்றல்', 'செயலாற்றுவதற்காகக் கற்றல்', 'பிறரோடு சேர்ந்து வாழக் கற்றல்', 'சுய ஆளுமையுடன் வாழக் கற்றல்' ஆகியவை கல்வியின் நான்கு தூண்களாக யுனெஸ்கோ முன்மொழிந்த அம்சங்கள் இவை. தன் காலத்தின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் குறித்துச் சிந்தித்தவரான மகாகவி பாரதி கல்விச் சிந்தனைகளிலும் தனித்தே உயர்ந்து நிற்கிறார்.