திருநெல்வேலி:பாளை., யில் கம்பன் கழக நான்காம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
கண்ணபிரான் தலைமை வகித்தார். இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் இதாயதுல்லா முன்னிலை வகித்தார். குமரகுருபரன் இறைவணக்கம் பாடினார். மவுனம் நல்லபெருமாள் வரவேற்றார்.
காஜாமைதீன் பேசினார். கம்பனை பயில்வோம் என்ற தலைப்பில் சாராடக்கர் கல்லூரி மாணவி கலைச்செல்வி, புஷ்பலதா மெட்ரிக் பள்ளி மாணவர் பொன். கார்த்திகேயன் பேசினர். இருவரும் கம்பராமாயண பாடல்கள் பாடினர்.
"ராமன் நோக்கில் தசரதன்' என்ற தலைப்பில் கவிஞர் பொன். வேலுமயில், "அங்கதன் நோக்கில் வாலி' குறித்து கவிஞர் ராஜாமுகமது, "இந்திரஜித் நோக்கில் ராவணன்' என்ற தலைப்பில் பாலகிருஷ்ணன் பேசினர். கம்பன் கழக தலைவர் பேராசிரியர் சத்தியமூர்த்தி நிறைவுரை ஆற்றினார்.
சங்கரன் நன்றி கூறினார்.