மணி பதினொன்று இருக்கும். எதோ கருகும் வாசனை வந்தது. 'கொஞ்ச நேரத்துக்கு முன் வீடு கொளுத்தும் கும்பலை பற்றி பேசிக்கொண்டிருந்ததால் ஏதேதோ பிரம்மையில் இப்படி தோன்றுகிறது' என்று நினைத்தவர் மீண்டும் கண்களை நன்கு மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் மூடிய கண்களுக்குள்ளும் வெளிச்சம் அடிப்பது போல் தோன்ற கண்களை திறந்து பார்த்தால் ஜன்னல் பக்கம் நெருப்பு. எழுந்து ஓடிப்போய் பார்த்தால் கொட்டகை எரிந்துக் கொண்டிருக்கிறது.
"ஐயோ... சாரு... குட்டிமா... எந்திரிடீ... நெருப்பு பத்தி எரியுதுடீ... எந்திரி... எந்திரி... ஏங்க எந்திரிங்க... ஐயோ இந்த மனுஷன் இப்படி குடிச்சுட்டு நிதானம் இல்லாமல் படுத்திருக்காரே...! நான் என்ன செய்வேன்... சாரு... வாடி வெளியே..." என்று கத்த
சாருமதி அவளுடைய அறையிலிருந்து எழுந்து ஓடிவந்தாள்.