ஒவ்வொரு மனிதனின் முடிவான இறுதியான ஒட்டுமொத்தமான ஒரே நோக்கம் என்னவென்றால் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே. கவலையை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழ விரும்பினால் வெற்றியைத் தன்வசப்படுத்த எப்போதும் பெரிதாகவே சிந்தியுங்கள்.
வாழ்வில் முன்னேற மட்டுமல்ல… நாம் ஒவ்வொரு நாளும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். இதற்காக பெரிய திட்டங்களை நம்பிக்கையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும். பெரிய நம்பிக்கைகளை அடைய நமக்கு தடையாக இருப்பது நமது வாழ்க்கை சூழ்நிலை அல்ல, எதிர்மறைச் சிந்தனைகளையே தொடர்ந்து நினைப்பதுதான். அதனால்தான் எதை நாம் நினைத்து பயந்துகொண்டே இருக்கிறோமோ அது நடந்துவிடுகிறது.