தொன்று தொட்டே காளான்கள் தாமாகவே, மடுக்களிலும், குகைகளிலும், ஈரம் தோய்ந்த நிலங்களிலும், மேலை நாடுகளில் குதிரைகள் மேயும் புல்வெளிகளிலும் தோன்றின. காளான்கள் செழித்து வளர்வதற்கு, குதிரைச் சாணங்கள் உரமாக, இயற்கையாகவே அமைந்ததால் உபயோகமாக இருந்தன. சுமார் இரண்டாயிரம் வகைக் காளான்கள் உணவாக உட்கொள்ளத்தக்க வகையில் உள்ளன.