வேலை செய்யாதவனுக்குச் சாப்பிட உரிமையில்லை என்பது விவிலிய மனைமொழி. வேலை செய்தாலும்ங்கூடச் சாப்பாட்டுக்கு போவதில்லை என்பது இன்றைய நிலவரம் காரணம் விலைவாசிகள் அந்த அளவுக்கு ஏறிப்போய் இருக்கின்றன ஒரு சராசரி மனிதனால் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கு இயலாத நிலை இன்று இருந்து வருகிறது. ஆகவே ஒவ்வொருவரும் தமது சொந்தக்காலில் நிற்பதற்கு ஏதேனுமொரு சுயவேலை வாய்ப்பையும் தொழிலையும் தேடிக்கொள்வதே பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்கும்.